என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 24 நவம்பர், 2011

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :நிறைகள்- குறைகள்

       (திரை இசை மும்மூர்த்திகள் )

     
     ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி , மூவருமே  தமிழ்த் திரையிசையின் trend Setter களாகத்   திகழ்ந்தவர்கள் கர்நாடக இசையில் சியாமா சாஸ்திரி,  தியாகராஜர் , முத்துஸ்வாமி தீட்சிதர் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப் படுகிறார்கள். அது போல  திரை இசை மும்மூர்த்திகள்  என்று எம்.எஸ்.வி , இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மூவரையும் கூறலாம். 

   இவர்களைப் பற்றிய ஒரு சிறு அலசல்
  
  ஏ.ஆர்.ரஹ்மான்(A.R.Rehman)
பலங்கள்:

  1. பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமாகியது.
  2. புதுமையான ஒலிக்கோர்வைகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
  3. குறுகிய காலத்தில் இந்தித் திரை  உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 
  4. இன்றுவரை இந்தியத் திரை இசை உலகில் முதல் இடத்தில் இருப்பது
  5. திரை இசை மட்டுமல்லாது ஆல்பங்களின் மூலமும் புகழ் பெற்றது.
  6. ஒரு பாடலை உருவாக்க பல நாட்கள் உழைப்பது
  7. குறைவான படங்களுக்கு மட்டுமே இசை அமைக்க ஒப்புக் கொள்வது
  8. பெரிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டுமே பணி புரிவது.
  9. அனைத்து வகையான புதிய தொழில் நுட்பங்களையும் பயன் படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பது
  10. உலகின் பல்வேறு இசை வடிவங்களை, இசைக் கருவிகளை fusion களை  திரையிசையில் பரிசோதனை செய்வது.
  11. தனது இசையை நேர்த்தியான  முறையில் மார்கெட்டிங் செய்யும் திறன் பெற்றிருப்பது
  12.  ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைக்கும் தகுதி பெற்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படக் கூடிய ஆஸ்கார் விருது பெற்றதோடு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது
  13.  மிகக் குறைவான படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் மற்ற இந்திய இசை அமைப்பாளர்களைவிட அதிக பணமும் அளவிலாத புகழும் சம்பாதித்தது.
  14.  இளமையான ஆக்ரோஷமான ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பது
  15.  அதிகம் பேசாமல் இருப்பது
  16.  மேற்கத்திய  பாணியில் இசை அமைப்பது
  17.  பல புதுபுது பாடகர்களை அறிமுகப்படுத்தியது

 பலவீனங்கள் குறைகள்
1. பெரிய இயக்குநர் தயாரிப்பாளர் படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பது
2.    ஒரு படம் இசை அமைப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது
3.    பாடல் வரிகள் புரிய வண்ணம் இசை அமைப்பது
4.    பாடலையும் தானே எழுதுவது
5.    இளையராஜா போலவே அனைத்துப் படங்களிலும் பாடுவது
6.    மொழி தெரியாப் பாடகர்களையே அதிகமாகப் பயன் படுத்துவது
7.   சாதாரண இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எளிதில் அணுக முடியாத  நிலையில் இருப்பது
8.     இசையில் அதிக இரைச்சல் இருப்பது
9.  நமது நாட்டுப்புறப் பாடல்களையும் மேற்கத்திய பாணியிலேயே இசை அமைப்பது
10.அதிகப் பாடகர்களை பயன்படுத்துவதால் பாடகர்கள் யாவரும் நிலைத்த புகழைப் பெறாமல் இருப்பது
11. மிகக் குறைவான பாடல்களுக்கு இசை அமைப்பது
12. மூத்த இசை அமைப்பாளர்கள் யாரையும் புகழ்ந்து ஒரு வார்த்தை கூட சொல்லாதது
*******************************************************************************************************
இளையராஜா (Ilayaraja)


பலங்கள்
  1. தமிழ்த் திரை இசைக்கு ஒரு புதிய பரிமாணம் தந்தது .
  2. காட்சிக்கான பின்னணி இசையில் முத்திரை பதித்தது.
  3. திரைப் படத்தின் விளம்பர பேனர்களில் இடம் பெற்ற முதல் இசை அமைப்பாளராகத் திகழ்ந்தது.
  4. இன்றளவும்  தீவிர பக்தர்களைப் போன்ற பெருத்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருப்பது.
  5. ஹிந்தி பாடல்களின் தாக்கத்தை தடுத்து நிறுத்தியது.
  6. ஒரு படத்தின் வெற்றிக்கு இசைஅமைப்பாளரின்  பங்கு முக்கியம் என்பதை முதன்முதலில் உணரச் செய்தது .
  7. தனது இசையின் மூலம் சாதாரணப் படங்களையும் வெற்றி படங்களாக்கியது.
  8. முரளி,மோகன்,ராமராஜன் போன்றவர்களையும்  வெற்றி நாயகர்களாய் ஆக்கியது.
  9. இசை அமைப்பாளராக  மட்டுமல்லாது பாடகராகவும் வெற்றிபெற்றது.
  10. அசுர வேகத்தில் இசையமைத்தாலும்  தரமான இசையை வழங்கியது.
  11. நான்கு முறை தேசிய விருது பெற்றது.
  12. புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும் சாதாரண இயக்குனராக இருந்தாலும் குறைவில்லாத தரத்துடன் இசை அமைத்தது.
  13. கிராமியப் பாடல்களுக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
  14. கர்நாடக இசையை சரியான கலவையில் திரை இசையில் பயன் படுத்தியது.
  15. முதன் முதலில் இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ் இசைக்கு  கௌரவம் பெற்றுத் தந்தது.
  16. பணமும் புகழும் சம்பாதித்தது
  17. தமிழ்த் திரை உலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள் இவரது வீட்டு வாசலில் காத்திருந்ததோடு Tittle பாடலை அவரே பாட வேண்டும்  என்று வற்புறுத்தியது.
  18. 900 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது
  19. நீண்ட காலம் போட்டியின்றி முதல் இடத்தில் இருந்து இசை ராஜாங்கம் நடத்தியது

பலவீனங்கள், குறைகள்

  1. புகழ் பெற்ற இயக்குனர்களையும் சாதரணமாக நடத்தியது.
  2. அதிகப் பாடல்களை தானே பாடுவது.
  3. அதிக வேகத்தில் இசை அமைப்பது.
  4. ஆணவம் பிடித்தவர் என்ற பெயர் எடுத்தது.
  5. வைரமுத்துவை விட்டுப் பிரிந்தது.
  6. தற்போது அதிகமாகப் பேசுவது.
  7. பாரதிராஜா உள்ளிட்ட நெருங்கியவர்களிடமும் கருத்து  வேறுபாடு கொள்வது.
  8. உலகத் தரத்தில் இசை அமைக்கும் தகுதி இருந்தும் அணுகுமுறை காரணமாக உலக அளவில் போதிய அங்கீகாரம் பெறாதது.
  9. சுமுகமற்ற சூழ்நிலை காரணமாக பலமுறை தேசிய விருதுகளை இழந்தது
  10. ஒரு முறை மட்டுமே தமிழில்  தேசிய விருது பெற்றது 
**********************************************************************************************
எம்.எஸ்.வி.
  1. கர்நாடக இசையின் தாக்கத்தில் இருந்த திரை இசையை பாமரரும் விரும்பும் மெல்லிசையாக மாற்றியது,
  2. எம்.ஜி.ஆர். சிவாஜி,போன்ற சாதனையாளர்களின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்தது.
  3. கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞனோடு  இணைந்து காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் தந்தது.
  4. நீண்ட காலம் இசை அமைப்பாளராக பணி ஆற்றியது.
  5. பாடல் வரிகள் தெளிவாகப் புரியும் வண்ணம் இசை அமைத்தது.

பலவீனங்கள் குறைகள்
  1. நீண்ட காலம் இசை அமைத்தும் தேசிய விருது பெறாதது.
  2. எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்தாதது .
  3. திறமை இருக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்காதது.
  4. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது.
  5. டி.எம்.எஸ், பி.சுசிலா போன்றவர்களை மட்டும் அதிகமாகப் பயன் படுத்தியது      
************************************************************************************************************
பார்க்க:
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம்பரபரப்பு!பகுதி3

10 கருத்துகள்:

  1. //வைரமுத்துவை விட்டுப் பிரிந்தது//
    எதற்காக எதை இழக்கிறோம் என்பது முக்கியமல்லவா. இருவருக்குமான பிரச்னை என்னவென்று அவர்களை தவிர வேறு யாருக்கு தெரியும்.அப்படி செய்தா(ர்)ன் இப்படி செய்தா(ர்)ன் என்று சேற்றை வாரி எறியாமல் வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது நன்றாகத்தானே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சார் தமிழ் தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தது யார் தெரியுமா? நம்ம எம்.எஸ்.வி.

    நல்ல பதிவு சார்

    பதிலளிநீக்கு
  3. மிக நேர்த்தியான பதிவு.சில நெருடல்கள்.ரஹ்மான் இதுவரை பாடல்கள் எழுதியுள்ளார? இல்லையே.பின் ஏன் 4. பாடலையும் தானே எழுதுவது.மற்றபடி சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. anaithu visayangalilum pothuvaga palam entru kooriyatheye bin palaheenam entru koorvathu muranpadana karuthaka therikirathu

    பதிலளிநீக்கு
  5. thangalathu karuthil sila visayangalil ethai palam entru kooriullirkalo bin athaye palaheenam entru kooriullirkal enave muranbadu ullathu pol thontrukirathu

    பதிலளிநீக்கு
  6. when we say " kuraikal" " palaveenangal" we cannot say their personal interest.

    For example, on MSV, it is saidநீண்ட காலம் இசை அமைத்தும் தேசிய விருது பெறாதது. THIS IS NOT HIS FAULT. IT'S COMPLETELY POLITICS. HE CANNOT GO BEHIND FOR RECOGNIZATION. OTHERS SHOULD RECOGNIE HIM.. IF THEY DON'T, MSV DIDN'T WORRY ABOUT IT.
    எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்தாதது HE DOESN'T WANT TO UTILIZE HIS INFLUENCE FOR ANYTHING. SO YOU CANNOT SAY " SARIYAAGA PAYANPADUTHTHATHU"
    திறமை இருக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்காதது.PEOPLE GAVE MSV A GREAT RESPECT TO HIM IN THEIR MIND.
    பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது.
    டி.எம்.எஸ், பி.சுசிலா போன்றவர்களை மட்டும் அதிகமாகப் பயன் படுத்தியது YES,DURING THOSE TIME, IT WAS HERO ORIENTED FILM WORLD, SO MGR, SIVAJI, JAI ALL DEMAND WHO HAS TO SING FOR HIM.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா அவர்களின் கருத்துக்களுடன் நானும் ஒத்து போகிறேன்.

    பதிலளிநீக்கு

  8. 2. ஒரு படம் இசை அமைப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது.
    இதை தவறு என்று சொல்ல முடியாது.


    10.அதிகப் பாடகர்களை பயன்படுத்துவதால் பாடகர்கள் யாவரும் நிலைத்த புகழைப் பெறாமல் இருப்பது.
    பாடகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி விட்டார்கள் என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது உதாரணத்திற்கு ரகுமான் ஒரு படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் அதன் பின்னர் முன்னேற்றம் கண்டது அவரது சொந்தத் திறமையால் தான். தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னம் வாழ்நாள் முழுக்க முழுக்க பtம் தர வேண்டும் என்று இவர் நம்பியிருக்கவில்லை.


    11. மிகக் குறைவான பாடல்களுக்கு இசை அமைப்பது.
    இதுவும் தவறு என்று சொல்ல முடியாது.

    12. மூத்த இசை அமைப்பாளர்கள் யாரையும் புகழ்ந்து ஒரு வார்த்தை கூட சொல்லாதது.
    மீடியாவில் வந்து சொன்னால்தான் மூத்த இசையமைப்பாளர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறார் என்று ஆகிவிடுமா என்ன?!!

    பதிலளிநீக்கு
  9. பலவீனங்கள், குறைகள்

    புகழ் பெற்ற இயக்குனர்களையும் சாதரணமாக நடத்தியது.
    அப்படியிருந்தால் புகழ் பெறாத இயக்குனர்களை மட்டும் சாதாரணமாக நடத்தலாமா! எந்த அளவுக்கு தரமான இசையை இளையராஜா வழங்கி இருக்கிறார் என்று பார்க்கும்போது இவர் அவர்களை சாதாரணமாக நடத்தியதாக நினைத்து அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியாதவர்கள் என்றுதான் நான் சொல்வேன்.


    வேகத்தில் இசை அமைப்பது.
    மேலே ரகுமான் மெதுவாக இசையமைக்கிறார் என்று அதையும் குறையாக சொல்லியிருக்கிறீர்கள் இங்கே இளையராஜா அதிவேகத்தில் இசையமைக்கிறார் என்று அதையும் குற்றமாக சொல்கிறீர்கள் நீங்கள் எதை சரியான வேகம் என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    ஆணவம் பிடித்தவர் என்ற பெயர் எடுத்தது.
    இது மற்றவர்கள் நினைத்துக்கொள்வது மேலும் ஒரு இசை மேதை என்று இருக்கும் பொழுது அவரது நடவடிக்கை ஆணவமாக மற்றவர்களுக்கு தோன்றக்கூடும் அப்படியே அவரை அன்பாக நடந்து கொண்டால் கூட அவர் தந்தை இசையை ஒரு பக்கம் வைத்துப் பார்க்கும்போது இந்த ஆணவம் என்பதெல்லாம் உப்பு பெறாத விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஊரில் மிகவும் தன்னடக்கத்துடன் ஆயிரக்கணக்கான பேர் இருப்பான் ஆனால் அவனும் இளையராஜா போல கோடிக்கணக்கான மக்கள் பல பத்தாண்டுகள் ரசிக்கும் இசையை கொடுத்தார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும்.



    பாரதிராஜா உள்ளிட்ட நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடு கொள்வது.
    பாரதிராஜாவுக்கும் பாலச்சந்தர் மனித ரத்தம் போன்றவர்களுக்கு இளையராஜா எப்பேர்ப்பட்ட இசையை கொடுத்தார் என்று பார்த்தால் அவர்கள் இவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இறங்கிவந்து இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்வேன்.


    உலகத் தரத்தில் இசை அமைக்கும் தகுதி இருந்தும் அணுகுமுறை காரணமாக உலக அளவில் போதிய அங்கீகாரம் பெறாதது.
    அங்கீகாரம் வழங்கப்படாதது ஒரு கலைஞனின் குற்றமல்ல அவன் அதை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டிருந்தால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு சுணக்கம் ஏற்பட்டு இருக்கும் எனவே விருதுகள் பாராட்டுகள் போன்றவை அவர் ஆதரவாக தானாக வரவேண்டும் அதைத் தேடிக்கொண்டு இவர் போய்க்கொண்டிருந்தால் தரமான இசையை இவர் வாழங்கி இருந்திருக்க மாட்டார்.

    சுமுகமற்ற சூழ்நிலை காரணமாக பலமுறை தேசிய விருதுகளை இழந்தது.
    எந்த இசைக் கலைஞரும் இது போன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவன் பாராட்டை பெற்று இவர்திஇவர் என்ற அங்கீகாரம் பெற வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறார் அதற்கு விருது பாராட்டு கொடுப்பது அவர்கள் விருப்பம் அதை நம்பி ஒரு கலைஞன் இருக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து.


    ஒரு முறை மட்டுமே தமிழில் தேசிய விருது பெற்றது.
    இதுவும் தவறு விருதுக்காக எந்த காலத்திலும் தனது கதையை வெளிப்படுத்துவது இல்லை அது வந்தால் போனஸ் அது வராவிட்டாலும் அதைப் பற்றி அவன் கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

    இதில் எனக்கு முக்கியமான மாற்றுக்கருத்து இளையராஜா வந்த பின்னர்தான் ஹிந்தி இசை தமிழகத்தில் இருந்து வெளியேறியது என்பது போன்ற சொல்வது வியப்பாக இருக்கிறது காரணம் என்னவென்றால் இளையராஜா இசையமைத்த ஆரம்பித்த பின்னர் கூட எம்எஸ்வி அவர்கள் அவ்வப்போது இசையமைத்துக் கொண்டுதான் இருந்தார் எனவே இளையராஜா வருவதற்கு முன்னாடி எம்எஸ்வி தான் முன்னணி இசையமைப்பாளராக இருந்து இருக்கிறார் அவர் இருக்கும்பொழுது தரமான செய்யத்தான் வழங்கியிருக்கிறார் இருந்தபோதும் ஹிந்தி இசைத்தமிழில் நுழைந்தது என்பது அவர் பெயருக்கு இழுக்காக தோன்றுகிறது அது நிஜம் தானா என்பது எனக்கு இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895