தம்பி! ஏனிந்தக்
கொலைவெறி?
நல்லதைத் தானே
விதைத்தார்கள்?
உன் நெஞ்சில்
ஏன்
நஞ்சு விளைந்தது?.
ஆசிரியர் மாணவனை
தண்டித்தது
அந்தக் காலம்.
மாணவர்கள்
ஆசிரியருக்கு தண்டனை
தருவதுதான்
இன்னும் கேவலம்!
உன்னை
திருத்த முனைந்தவரை
தீர்த்துக்கட்டிவிட்டாயே.!
ஆயிரம் முறை
மெக்கா போய் வந்தாலும்
அகலாது
உன்பாவம்!
ஆயுள் முழுதும்
கங்கையில் மூழ்கிக்
கிடந்தாலும்
கரையுமா
உனது பாவம்?
எந்த
திருச்சபையிலாவது
உனக்கு
பாவ மன்னிப்பு
வழங்கப்படுமா?
இளமையில் கல்
என்றுதானே சொன்னார்கள்!
இளமையில் கொல்
என்றா கூறினார்கள்?
புத்தியோடு
வரவேண்டிய நீ
கத்தியோடு
வந்தாயே?
மாணவர்கள்
ஆயுதங்களோடு வந்தால்
ஆசிரியர்கள்
கவசங்களோடுதான்
கல்விசாலை வரவேண்டுமா?
படிக்க விருப்பம்
இல்லையா?
பல கலைத்தொழில்கள்
கைகொடுக்குமே?
நீ ஏன் கொலைத்தொழில்
புரிந்தாய்?
திட்டியதற்காக
கொல்வதென்றால்
இந்த உலகில்
இன்னும் மிச்சம்
இருக்கப்போவது யார்?
ஆயிரம் அற நூல்களும்,
நீதி நூல்களும்
இருந்தென்ன?
உன் அகத்தில்
அறம் வளர்க்க
முடியவில்லையே?
நீ உன்
ஆசிரிய தெய்வத்தை
மட்டுமா கொன்றாய்?
உன்னைப்போன்ற
மாணவர்களின் மீது
வைத்த நம்பிக்கையையும்
சேர்த்தே அல்லவா
கொன்றுவிட்டாய்!
போதும்!
இதுவே
கடைசியாக இருக்கட்டும்!
இது போன்ற
சம்பவங்களுக்கு
இனியாவது
முடிவு பிறக்கட்டும்!
*********************************************************************************************
இதையும் படிக்க

இது ஒரு அதிர்ச்சியான சம்பவம். இது வருந்தகூடிய சம்பவமும் கூட !!
ReplyDeleteமாணவர்கள்
ReplyDeleteஆயுதங்களோடு வந்தால்
ஆசிரியர்கள்
கவசங்களோடுதான்
கல்விசாலை வரவேண்டுமா?
மனதழவில் எத்தனை மானவர்கள் வகுப்பரைகளில் சாகிறார்கள் என்பதை இந்த ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும்
ReplyDeleteவளருகின்ற சமுதாயத்திற்கு இது சாபக்கேடு . பள்ளிப் புத்தகம் தூக்கவேண்டிய பையன் கத்தி தூக்குகின்றான் என்றால் எங்கே போகிறது இந்த சமுதாயம்
ReplyDeleteவளருகின்ற சமுதாயத்திற்கு இது சாபக்கேடு . பள்ளிப் புத்தகம் தூக்கவேண்டிய பையன் கத்தி தூக்குகின்றான் என்றால் எங்கே போகிறது இந்த சமுதாயம்
ReplyDeleteஇளமையில் கல்
ReplyDeleteஎன்றுதானே சொன்னார்கள்!
இளமையில் கொல்
என்றா கூறினார்கள்?
அற்புதமான வரிகள்